நூறு கோடி இந்திய மொபைல் பயனாளர்கள்.....

நூறு கோடி இந்திய மொபைல் பயனாளர்கள்.....


K.D.D.

11JAN
2016 
இந்தியா, அக்டோபர் மாத இறுதியில், தன் மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கையை நூறு கோடியாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது. செப்டம்பரில், இந்த எண்ணிக்கை 99 கோடியே 67 லட்சமாக இருந்தது. இந்த தகவலை, இந்தியாவில் தொலை தொடர்பு நிறுவனங்களைக் கண்காணித்து வழி நடத்தும் 'ட்ராய்' (Telecom Regulatory Authority of India (TRAI)) அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, மொபைல் போன் இணைப்பு கொண்டவர்களில், அதிகமானவர்களைக் கொண்டவர்களை இந்தியா பெற்றுள்ளது.
அண்மையில், இந்தியாவில், ஸ்மார்ட் போன்களின் விலை, அனைவரும் வாங்கும் வகையில் குறையத் தொடங்கியது. அதே போல, மொபைல் சேவை கட்டணமும் பல நிறுவனங்களால், அனைவரும் பெறும் வகையில் குறைக்கப்பட்டது. இதற்குக் காரணம், மொபைல் சேவை நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெற பலத்த போட்டியில் இறங்கியதும் ஆகும். 
டிசம்பர் இறுதியில், மத்திய தொலை தொடர்பு அமைச்சர், இந்தியாவில் இணைய இணைப்பு பெற்றிருப்பவர்கள் 40 கோடி என அறிவித்திருந்தார். இது, மொபைல் வழி இணைய இணைப்பு பயன்படுத்தியவர்களையும் உள்ளடக்கியதாகும். நடப்பு ஆண்டில், இது விரைவில் 50 கோடியை எட்டும் எனவும் தெரிவித்தார். இங்கு மொபைல் சேவை பயன்படுத்துவோரில், 50 வயதுக்கும் அதிகமானவர்கள் 6 சதவீதம் மடுமே. இதிலிருந்து, இந்தியாவின் மூத்த குடிமக்கள், மொபைல் வழி இணையத்தினைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு என்று தெரிகிறது. இதே நிலை, ஆசிய நாடுகளான தாய்லாந்து, பாங்காக் மற்றும் மலேசியாவிலும் காணப்படுகிறது.
உயரும் லாலிபாப் சிஸ்டம் பயன்பாடு...

உயரும் லாலிபாப் சிஸ்டம் பயன்பாடு...


K.D.D.

11JAN
2016 
கூகுள் நிறுவனம் தன்னுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்கள் குறித்து, சென்ற வாரத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருவதாக அறிவித்துள்ளது. ஜனவரி மாதம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களில், 32.6% பேர் லாலிபாப் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இது டிசம்பரில் 29.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக வெளியான, மார்ஷ் மலோ, இன்னும் 0.7% ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே இயங்குகிறது. இது முந்தைய மாதத்தின் பயன்பாட்டைக் காட்டிலும் 0.2% அதிகமாகும். கிட்கேட் இன்னும் முதல் இடத்தில் உள்ளது. இதன் பயன்பாடு 36.1%. ஜெல்லி பீன் 24.7% லிருந்து, 26.9% ஆக உயர்ந்துள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் 2.7% ஆகக் குறைந்தது. ஜிஞ்சர் ப்ரெட் 3% போன்களில் காணப்பட்டது. ப்ரையோ சிஸ்டம் 0.2% போன்களில் மட்டுமே இயங்கி வருகிறது. வரும் காலத்தில், மார்ஷ் மலோ பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் புதிய ஸ்மார்ட் போன்கள்..

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் புதிய ஸ்மார்ட் போன்கள்..


K.D.D.

11JAN
2016 
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சென்ற மாதம், தன் கேன்வாஸ் வரிசையில், இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. இதன் பெயர்கள் Canvas Mega E353 மற்றும் Canvas Mega 4G Q417. இவை இரண்டும் 4ஜி ஸ்மார்ட் போன்களாகும். இவற்றின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

மெகா இ 353 மாடல்: திரை 5.5 அங்குலம். பிக்ஸெல் திறன் 1280 x 720 . எச்.டி. டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர், மீடியா டெக் MT6592M ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு, 13 எம்.பி. திறனுடன் பின்புறக் கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புற செல்பி கேமராவும் செயல்படுகின்றன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 154×78.7×8.9 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,820 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,999.

கேன்வாஸ் மெகா 4G Q417 மாடலின் சிறப்பம்சங்கள்: திரை 5.5 அங்குலம். பிக்ஸெல் திறன் 1280 x 720 . எச்.டி. டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர், மீடியா டெக் MT6735 ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு, 13 எம்.பி. திறனுடன் பின்புறக் கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புற செல்பி கேமராவும் செயல்படுகின்றன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,999.

THANKS - DINAMALAR
மோட்டாரோலா மோட்டோ ஜி டர்போ...

மோட்டாரோலா மோட்டோ ஜி டர்போ...


K.D.D.

11JAN
2016 
சென்ற மாதம், அனைவரும் எதிர்பார்த்தபடி, மோட்டாராலோ நிறுவனம் தன்னுடைய மோட்டோ ஜி டர்போ மாடல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1280 x 720 பிக்ஸெல்கள் கொண்டு எச்.டி. டிஸ்பிளே திறனுடன் 5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1.1. (லாலிபாப்) ஆக உள்ளது. டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் சிஸ்டத்துடன் 13 மெகா பிக்ஸெல் திறனுடன், இதன் பின்புற இயக்கக் கேமரா உள்ளது. இது 1080p திறனுடன் விடியோ பதிவையும் மேற்கொள்கிறது. ஐ.ஆர். பில்டர் இந்தக் கேமராவுடன் தரப்பட்டுள்ளது. முன்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. 
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 4ஜி எல்.டி. இ. நெட்வொர்க் இணைப்பினை இதில் மேற்கொள்ளலாம். இதன் ப்ராசசர் ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 615 ஆகும். இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் கூட, போனை தொடர்ந்து 6 மணி 15 நிமிடங்கள் பயன்படுத்தலாம். இதில் 15W Turbo சார்ஜர் தரப்பட்டுள்ளது. மூன்று அடி ஆழ நீரில், இந்த போனை 30 நிமிடங்கள் வைத்திருந்தாலும், இது கெட்டுப் போகாது. 
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம்.ரேடியோ ஆடியோ ரசிகர்களை மகிழ்விக்கும். இதன் பரிமாணம் 142.1 x 72.4 x 6.1-11.6 மி.மீ. எடை 155 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,470 mAh திறன் கொண்டு டர்போ சார்ஜ் வசதியுடன் செயல்படுகிறது. ரூ.14,499 என விலையிடப்பட்டுள்ள இந்த மாடல் ஸ்மார்ட் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
"தெரிந்து கொள்ளுங்கள்”

"தெரிந்து கொள்ளுங்கள்”

K.D.D.

11JAN
2016 
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

THANKS - DINAMALAR
பெர்சனல் பிரேக்!

பெர்சனல் பிரேக்!


பதிவு செய்த நாள்

11ஜன
2016 
00:00
கூகுள் 20 லட்சம் பேருக்கு ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் அப்ளிகேஷன்கள் எழுதத் தரும் வாய்ப்பினை நம் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டு தோறும் நல்ல வேலை கிடைக்காமல் தங்கும் லட்சம் பொறியாளர்கள் இதற்குத் தங்களை இப்போதிருந்தே தயார் செய்து கொள்ள வேண்டும்.
என். இராமகிருஷ்ணன், மதுரை.

2016 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும். உங்களுடைய ”மைக்ரோசாப்ட் 2015/16” என்ற கட்டுரையில், இது குறித்த தகவல்களை இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன். விண்டோஸ் லூமியா போன்கள் எந்த வகைகளில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வெளிவரும் என்ற கோணத்திலும் தகவல்கள் தரவும்.
என்.ஸ்ரீவித்யா, சென்னை.

ஐ.பி. மற்றும் மேக் முகவரிகள் அறிந்து கொள்வது குறித்துத் தரப்பட்டுள்ள கட்டுரை, நல்லதொரு பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது. தெளிவான தகவல்களுக்கு நன்றி.
எஸ். பூபாலன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

பிரவுசர் தரும் பிழைச் செய்திகளில், அண்மைக் காலமாக வரும், 500 என்ற வரிசையில் கிடைக்கும் செய்திகள் குறித்து விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சா. பூமிநாதன், விழுப்புரம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் ஒவ்வொரு பதிப்பு குறித்தும் தாங்கள் வழங்கியுள்ள அறிவுரை மிக அருமை. துல்லியமாக நாம் என்ன செய்திட வேண்டும் என்பதனைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.
எஸ். பிரஜா லஷ்மி, மதுரை. 

விண்டோஸ் 10 குறித்த கேள்விகள் அதிகம் வருவதிலிருந்து, இன்னும் இது குறித்து தெளிவான கட்டுரைகள் தேவை எனத் தெரிகிறது. வாரந்தோறும், ஒவ்வொரு நோக்கிலும், கட்டுரை வெளிவந்தால், கட்டாயத்தின் பேரில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறத் திட்டமிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எஸ். ஜனார்த்தனன், திருப்பூர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், அதுவரை கோலோச்சி வந்த நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரை இருந்த இடம் இல்லாமல் செய்தது. பயர்பாக்ஸ் வந்த பின்னரும், அதனுடன் போட்டியிட்டு தொடர்ந்து தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. குரோம் மட்டுமே அதனுடன் பல நிலைகளில் போட்டியிடும் பிரவுசராக இன்றும் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட பிரவுசர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தாலேயே ஓரம் கட்டப்படுகிறது. தொழில் நுட்ப உலகில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இதுவே சாட்சி. 
பேரா. க. ஸ்வாமிநாதன், கும்பகோணம்.

நாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களில் பேஸ்புக் நோட்டிபிகேஷன்களை நிறுத்தும் வழிகள் புதியவை மற்றும் பயனுள்ளவை. கவனம் எடுத்து அனைத்து வழிகளையும் தந்துள்ளீர்கள். எழுதியவருக்குப் பாராட்டுகள்.
சேது பாண்டியன், மதுரை.

குரோம் பிரவுசர் டேப்பில் காணப்படும் ஸ்பீக்கர் ஐகானைப் பலமுறை கிளிக் செய்து, ஏன், ஒலிப்பது நிறுத்தப்படவில்லை என்று ஏமாற்றம் அடைந்துள்ளேன். தாங்கள் இது குறித்து குரோம் ட்ரிக்ஸ் என்ற பகுதியில் அளித்த விளக்கத்தைப் படித்த பின்னரே, என் தவறு புரிந்தது. விளக்கத்திற்கு நன்றி.
எஸ். புருஷோத்தம ராஜ், சேலம்.

THANKS - DINAMALAR
எக்ஸெல் டிப்ஸ்!

எக்ஸெல் டிப்ஸ்!


K.D.D.

11JAN
2016 
ஸ்கிரீன் டிப்ஸ் வேண்டாமா!: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமிலும், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.
2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.
3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don't Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது. 

பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட
: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும். 
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்காமாக properties காட்டும். 
2. அடுத்து Document Properties ஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும். 
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். 
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.

அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே எண்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.

THANKS -  DINAMALAR
வேர்ட் டிப்ஸ்!

வேர்ட் டிப்ஸ்!


K.D.D.

11JAN
2016 
வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை வேர்ட் எடுப்பதே இல்லை. அதில் அந்த வசதி எல்லாம் இல்லை எனவும் பதிலளிக்கலாம். இதில் எது உண்மை?
வேர்டில் உருவாக்கப்படும் பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த செயல்பாட்டினை வேர்ட் தானாக, மாறா நிலையில் கொண்டிருக்க வில்லை. நாமாகத்தான் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டும். அது எப்படி எனப் பார்க்கலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி வேர்ட் ஆப்ஷன்ஸ் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனுடைய பைல் டேப் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, அதன் பின்னர், ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். 
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 
3. இங்கு கீழாக Save options என்பதனைக் காணும் வரை செல்லவும். டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Save என்ற ஆப்ஷனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டும் ஒன்றல்ல.
4. இங்கு Always Create Backup Copy என்பதில் கிளிக் செய்திடவும். செக் மார்க் ஒன்றை இதில் ஏற்படுத்தவௌம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
இதனை அடுத்து, உருவாக்கப்படும் டாகுமெண்ட் அனைத்திற்கும் பேக் அப் காப்பி அமைக்கப்படும். அதாவது, டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் சேவ் செய்திடுகையில், அதற்கு முந்தைய நிலையில் உள்ள டாகுமெண்ட், பேக் அப் காப்பியாக இருக்கும். ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போன நிலையில், இந்த பேக் அப் காப்பியினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பைலின் துணைப் பெயரினை ஒரிஜினல் பைலின் பெயராக மாற்றிக் கொள்ளலாம்.

எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். 
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
எட்டு இந்திய மொழிகளில் ஹைக் மெசஞ்சர்....

எட்டு இந்திய மொழிகளில் ஹைக் மெசஞ்சர்....


K.D.D.

11HAN
2016 
இந்தியாவில் உருவான மெசேஜ் செயலியான ஹைக் (Hike Messenger) இனி எட்டு இந்திய மொழிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலி அண்மையில் வெளியானது. தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஹைக் மெசஞ்சர் வழியாக செய்திகளை அனுப்பலாம். எனவே, ஆங்கிலம் தெரியாததால், இதனைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொண்டவர்கள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டு, தங்கள் மொழிகளிலேயே டெக்ஸ்ட் அனுப்ப இயலும். ஒருவர் தன் தாய் மொழியில் தான் தன் எண்ணங்களைச் சிறப்பாகக் கூற முடியும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் டெக்ஸ்ட் அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளதால், இணையப் பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொழிகளில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 47% அதிகரித்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், இது 12.70 கோடியாக இருந்தது. கிராமப் புறங்களில், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாகும். 
இந்திய மொழி பயன்பாடு நிச்சயம் ஒரு சாதனை மைல் கல்லாய் அமையும். ஏனென்றால், ஆங்கிலம் அறியாத இந்தியப் பயனாளர்கள் 88% ஆக உள்ளனர். 
தற்போது தரப்பட்டிருக்கும் ஹைக் அப்ளிகேஷன் மூலம், ஸ்மார்ட் போனில், நாம் விரும்பும் இந்திய மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் பன்மொழி கீ போர்ட் மூலம், ஆங்கிலம் உட்பட 9 மொழிகளில் டெக்ஸ்ட் அமைக்கலாம். இந்த ஒன்பது மொழிகளுக்காக எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ளலாம். எனவே, வேடிக்கையாகவும் நம் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். 
இந்த கீ போர்டில், முன் கூட்டியே அமைக்க இருக்கும் டெக்ஸ்ட்டினைக் கூறும் வசதி (predictive text) தரப்பட்டுள்ளது. இதற்கென செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப் படுகிறது. இதனால், டெக்ஸ்ட் அமைப்பதில் குறைவான நேரமே செலவாகும். 
சென்ற செப்டம்பர் வரை, ஹைக் பயனாளர்களின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டிய நிலையில் இருந்தது. இந்தியாவில், அதிகம் பயன்படுத்தப்படும் இலவச டெக்ஸ்ட் மெசேஜ் அப்ளிகேஷன்களில், ஹைக் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் பிளாக் பெரி ஆகிய ஸ்மார்ட் போன்களில் இது இயங்கும் தன்மை கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சாதா திரையைத் தொடு உணர் திரையாக்க....

சாதா திரையைத் தொடு உணர் திரையாக்க....


K.D.D.

11JAN
2016 
ஸ்மார்ட் போன்களைப் பின்பற்றி, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடு உணர் திரை இயக்கம் கொண்டதாக அமைத்தது. விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடு உணர் திரையாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இந்த வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விலை அதிகமாக இருந்ததால், பழைய வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நியோ நேட் (Neonode) என்ற நிறுவனம், புதிய தொரு இணைப்பு சாதனத்தை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதனை ஏர்பார் (Air Bar) எனப் பெயரிட்டுள்ளது. இதனை யு.எஸ்.பி. போர்ட் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 
இந்த சாதனம் நம் கண்களுக்குப் புலப்படாத வகையில், ஒளிக் கதிர்களை, டச் ஸ்கிரீன் அல்லாத திரைக்கு அனுப்பி, அந்த திரையை தொடு உணர் திறன் கொண்ட திரையாக மாற்றுகிறது. 2016ல் இது விற்பனைக்கு வர உள்ளது. அறிமுக விலை 49 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் மாடல், 15.6 அங்குல திரை கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 
இந்த சாதனத்தினை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்க வேண்டும். அதன் பின்னர், ஏர் பார் எனப்படும் நீண்ட வடிவிலான துண்டினை டிஸ்பிளே திரைக்குக் கீழாக இணைக்க வேண்டும். உடன், இந்த பட்டையிலிருந்து கண்களுக்குப் புலப்படாத ஒளிக் கற்றைகள் இயக்கப்பட்டு திரையை அடைகின்றன. அவை, நம் கரங்கள் திரையில் தொடும் இடங்களைக் கண்காணித்து செயல்படுகின்றன. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளுடன் இந்த பார் இணைந்து செயல்படுகிறது. இதனை Force AIR தொழில் நுட்பம் என நியோ நோட் நிறுவனம் அழைக்கிறது. 
இதன் செயல்பாட்டிற்கென ஒட்டப்படும் பட்டை, லேப்டாப் கம்ப்யூட்டரை மூடும்போது சிக்கல் ஏற்படுத்தும் என்பதால், லேப்டாப் கம்ப்யூட்டரில் செயல்பட்டு முடித்தவுடன், இந்த பட்டையை நீக்கிவிட்டு, கம்ப்யூட்டரை மூட வேண்டும். 
இதன் செயல்படும் திறன் அறிய https://www.youtube.com/watch?v=p6VdbZxBoac என்ற முகவரியில் உள்ள காணொளிப் படத்தினைக் காணவும். ஜனவரியில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும் CES 2016 கண்காட்சியில், மற்ற புதிய சாதனங்களுடன், இது மக்களுக்குக் காட்டப்படும்.
குரோம் எக்ஸ்டன்ஷன்கள் எடுத்துக் கொள்ளும் இடம்..

குரோம் எக்ஸ்டன்ஷன்கள் எடுத்துக் கொள்ளும் இடம்..


K.D.D.

11JAN
2016 
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.
இது ஒரு நல்ல ஏற்பாடு தான். ஆனால், நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட இந்த புரோகிராம்கள், சில வேளைகளில் நம் கம்ப்யூட்டர் இயக்கத்தில் தலைவலையையும் ஏற்படுத்துகின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், அவை நம் கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தைக் குறைக்கின்றன. குறிப்பாக, நாம் பழைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கினால், இந்த வேகக் குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. நம் இணையத் தேடலின் வேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், நமக்குத் தேவையில்லாத, ஏதோ ஒரு காரணத்திற்காக, நாம் பதிந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவதே சிறந்த வழியாகும். 
எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்கும் முயற்சியில் இறங்கும் முன், எந்த புரோகிராம்கள், அதிக மெமரி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்று அறிந்து, நீக்குவதில் அவற்றுக்கு முதல் இடம் தர வேண்டும். இதற்கு டாஸ்க் மேனேஜரைப் (Chrome Task Manager) பயன்படுத்தலாம். அதில் எந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்து அதனை அன் இன்ஸ்டால் செய்திடலாம். கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. குரோம் பிரவுசர் விண்டோவினைத் திறக்கவும்.
2. இதன் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். இது 'control and customize' என்று சொல்லப்படும். இதில் கிளிக் செய்து, குரோம் பிரவுசர் இயக்கத்தினை, நம் விருப்பப்படி நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். 
3. இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் 'tools' என்னும் லேபிள் மீது கிளிக் செய்திடவும். பின்னர், 'Task Manager” என்பதில் கிளிக் செய்திடவும். டாஸ்க் மேனேஜரைத் திறக்க Shift+Esc என்ற இரு கீகளை அழுத்தவும் செய்திடலாம்.
4. இப்போது டாஸ்க் மேனேஜர் விண்டோ உங்களுக்குக் கிடைத்திருக்கும். இங்கு நாம் திறந்திருக்கும் டேப்களுடன், உங்கள் பிரவுசருக்கென, நீங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பெயர்களின் முன்னால், jigsaw puzzle கட்டங்கள் போன்ற சிறிய படம் இருப்பதைப் பார்க்கலாம். 
5. இங்கு எளிதாக, ஒவ்வொரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமும், எவ்வளவு மெமரி இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன என்று கண்டறியலாம். 'Memory tab' என்பதில் கிளிக் செய்தால், இந்த மெமரி இட அளவின் அடிப்படையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வரிசைப்படுத்தப்படும். 'Stats for nerds' என்பதில் கிளிக் செய்வதன் மூலம், மெமரி பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம். இந்த 'Stats for nerds' டாஸ்க் மானேஜர் விண்டோவின் இடது கீழ் மூலையில் தென்படும். 
6. இந்த தகவல்களைப் பார்க்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், எது அதிக மெமரி இடத்தைப் பயன்படுத்துகிறது என்று தெரியவரும். அது கட்டாயமாகத் தேவைப்படவில்லை எனில், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.
இதன் பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரை இயக்கினால், பிரவுசரைப் பயன்படுத்தினால், அதன் இயக்கத்தில் வேகம் சற்று அதிகமாக இருப்பது தெரிய வரும்.
மறைக்கப்படும் பைல்கள்....

மறைக்கப்படும் பைல்கள்....


K.D.D.

11JAN
2016 
நம் கம்ப்யூட்டர்களில், போல்டர்களில், சில பைல்கள் மறைக்கப்பட்டே கிடைக்கின்றன. நாம் யாரும் இவற்றைப் பார்ப்பது இல்லை. நம் பைல் மேனேஜரில், இந்த மறைக்கப்பட்ட பைல்களைக் (Hidden Files) காட்டும்படி செட் செய்தால், ஒவ்வொரு போல்டரிலும் சில பைல்களைக் காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் thumbs.db மற்றும் desktop.ini என்னும் பைல்களை உருவாக்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் .DS_Store என்னும் பைல்களை உருவாக்கித் தருகிறது.
பெரும்பாலான பயனாளர்கள், இந்த பைல்களைக் காண்பதில்லை. இவை மறைக்கப்பட்ட பைல்கள் என்றே அழைக்கப்படுகின்றன. நாமாகப் போய், இவற்றைப் பார்த்தே ஆக வேண்டும் என முயற்சி எடுத்தால், இவற்றைக் காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன் இயக்கத்தினை விரைவுபடுத்த, இந்த பைல்களை உருவாக்கி இயக்குகிறது. இருந்தாலும், நாம் விரும்பினால், இவை உருவாவதைத் தடுக்கவும் செய்திடலாம். முதலில் இவை ஏன், எதற்காக உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.
இந்த மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டும்படி செய்வதற்கு, கீழே தந்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. முதலில் Start> Control Panel> Appearance and Personalization எனச் சென்று, Folder Options என்பதைத் திறக்கவும். 
2. தொடர்ந்து View டேப் மீது கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Advanced settings என்பதில், Show hidden files and folders என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஓகே என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இனி, அனைத்து மறைக்கப்பட்ட பைல்களும் காட்டப்படும். அவை குறித்த விளக்கங்களை கீழே தருகிறேன்.

முதலாவதாக thumbs.db பைல்: இது ஒரு டேட்டா பேஸ் பைல். இதன் பெயர் குறிப்பிடுவது போல பட பைல்களில் உள்ள படங்களின் “thumbnail” அளவிலான படங்கள் இதில் அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அல்லது பைல் எக்ஸ்புளோரரில், போல்டர் ஒன்றைத் திறக்கும்போது, அதில், படங்கள் கொண்ட பைல்கள் இருந்தால், விண்டோஸ் அவற்றின் நக அளவிலான தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை thumbs.db என்ற பைலில், குறிப்பிட்ட அந்த போல்டரில் சேமிக்கப்படுகின்றன. இதனால், அடுத்த முறை, இந்த போல்டர் திறக்கப்படுகையில், ஏற்கனவே அமைத்து வைக்கப்பட்ட இந்த சிறிய அளவிலான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயல்பாடுகள் நம் கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால், இந்த பைல் மறைக்கப்பட்ட பைலாகவே உள்ளது. இது கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நல்லதுதான். ஆனால், சில வேளைகளில் இவை குழப்பத்தினை உண்டாக்குகின்றன. இணையத்தில் உள்ள வெப் சர்வர் ஒன்றுக்கு, டைரக்டரிகளை அப்லோட் செய்திடுகையில், இந்த thumbs.db பைல்களும் இணைந்தே அனுப்பப்படுகின்றன. இந்த செயல்பாட்டினை யாரும் தடுப்பதில்லை. இந்த பைல்கள் உருவாக்கப்படுவதனைத் தடுக்க வேண்டும் எனில், நாம் Registry Editor வழியாக, ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அல்லது Group Policy Editor பயன்படுத்த வேண்டும். 
Group Policyயில் இதனை மேற்கொள்ள, விண்டோ மற்றும் R கீயை அழுத்தி ரன் டயலாக் பாக்ஸ் பெற வேண்டும். இங்கு, “gpedit.msc” என டைப் செய்து எண்டர் அழுத்த வேண்டும். அடுத்து கிடைக்கும், User Configuration > Administrative Templates > Windows Components > File Explorer எனச் செல்ல வேண்டும். இது விண்டோஸ் 10/ 8/ 8.1 சிஸ்டத்தில் இயங்குபவர்களுக்கு. நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால், User Configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer எனச் செல்லவும். இங்கு, “Turn off the caching of thumbnails in hidden thumbs.db files” என்பதில் டபுள் கிளிக் செய்து, “Enabled” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
ரன் விண்டோவில், “regedit”, என டைப் செய்து, ரெஜிஸ்ட்ரி எடிட்டரைப் பெறவும். ரெஜிஸ்ட்ரி கிடைத்தவுடன், அதில் “HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\Advanced” என்ற வரிக்குச் செல்லவும். வலது புறப் பிரிவில், “DisableThumbnailCache” என்ற இடத்திற்குச் சென்று, அதன் மதிப்பினை, “1” ஆக அமைக்கவும். 
இரண்டாவதாக desktop.ini பைல் விண்டோஸ் இயக்கம் desktop.ini என்ற பெயரிலும் பைல்களை உருவாக்குகிறது. இவை கூடுதலான கவனத்துடன், மறைக்கப்பட்ட பைல்களாக வைக்கப்படுகின்றன. இவை மறைக்கப்படுவது மட்டுமின்றி, பாதுகாக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களாகவும் அமைக்கப்படுகின்றன. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால், பைல் எக்ஸ்புளோரர் அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரரில், “Hide Protected Operating System Files (Recommended)” என்பதை Disable என்ற நிலையில் அமைக்க வேண்டும். Folder Options விண்டோவில் இந்த செட்டிங்ஸ் கிடைக்கும்.
இந்த desktop.ini பைலை விண்டோஸ் எதற்குப் பயன்படுத்துகிறது? ஒரு போல்டர் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதற்கு, விண்டோஸ் இந்த பைலைப் பயன்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்கத்தில், சில போல்டர்களை நகர்த்துகையில், ”இது சிஸ்டம் போல்டர்; இதனை நீங்கள் நகர்த்தக் கூடாது”என உங்களை விண்டோஸ் இயக்கம் எச்சரிக்கும். சில போல்டர்களுக்குத் தனியான முறையில் ஐகான்கள் அமைக்கப்படும். இந்த செயல்பாடுகள் எல்லாம், desktop.ini பைல் மூலம் விண்டோஸ் மேற்கொள்கிறது.
இந்த பைல்கள் உருவாக்கப்படாமல் இருக்க எந்த வழியும் விண்டோஸ் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களைக் காட்டாமல் இருக்குமாறு, விண்டோஸ் இயக்கத்திற்குச் சொல்லலாம். 

மூன்றாவதாக .DS_Store பைல்: ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டம் .DS_Store பைல்களைத் தன் இயக்கத்தில் உருவாக்குகிறது. இவை, ஒவ்வொரு போல்டரிலும் உருவாக்கப்பட்டு, விண்டோஸ் இயக்கத்தின் desktop.ini பைல்கள் போலச் செயல்படுகின்றன. இந்த பைல்களின் பெயரின் தொடக்கத்தில் “.” இருக்கும். எனவே, இவை மறைக்கப்பட்டு இருக்கும். யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் மறைக்கப்பட்டே இருக்கும். இவை, மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சாதாரணமாகத் தெரியாது. நடைமுறை வழிகள் அல்லாமல், வேறு வழிகளில் சென்றால் மட்டுமே இவற்றைக் காண முடியும். இவை வழக்கமான Finder அல்லது அதனைப் போன்ற பயன்பாடுகளில் காட்டப்பட மாட்டாது.
இந்த பைலில் தான், போல்டர் ஒன்றில், ஐகான்கள் எந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்ற தகவல் அமைக்கப்படுகிறது. போல்டரின் பின்புல படம் மற்றும் பிற தகவல்களும் இங்கு பதியப்படுகின்றன. Finder வழியாக, போல்டரை நீங்கள் திறக்கும்போது, Finder இந்த பைலைப் படித்து, போல்டரில் உள்ளவற்றை எப்படிக் காட்ட வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல்படுகிறது. 
நாம் இந்த செட்டிங்ஸ் அமைப்பினை மாற்றுகையில், Finder அதனை .DS_Store பைலில் பதிந்து வைக்கிறது. இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், அதாவது, இவை உருவாக்கப்படாமல் அமைத்தால், நெட்வொர்க் அமைப்பில் செயல்படுகையில், மிக மோசமான வகையில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, இவற்றை மேக் ஓ.எஸ். உருவாக்க விடுவதே நல்லது.

THANKS -THINAMALAR
ஜன. 12 முதல் உதவிகள் நிறுத்தம்..,.

ஜன. 12 முதல் உதவிகள் நிறுத்தம்..,.

K.D.D.

11JAN
2016 
மைக்ரோசாப்ட் நிறுவனம், நாளை, ஜனவரி 12,2016 முதல், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கான சப்போர்ட் பைல்கள் வழங்குவதை நிறுத்த உள்ளது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9 மற்றும் 10 ஆகியவை அடங்கும். தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு கட்டாயமாக மாற்றிக் கொள்ளுமாறு, மைக்ரோசாப்ட் வற்புறுத்துகிறது. 
அல்லது, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், எட்ஜ் பிரவுசருக்கு மாறிக் கொள்ள வேண்டும். 
இறுதியாக வெளியிடப்பட்ட, பிழைகள் திருத்தும் சப்போர்ட் பைலுடன், இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.https://www.microsoft.com/en-us/WindowsForBusiness/End-of-IE-support என்ற முகவரியில் இதனைக் காணலாம்.
எனவே, நாளை, ஜனவரி 12 முதல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயலியின், அண்மைக் காலத்திய பதிப்பான, பதிப்பு 11க்கு மட்டுமே இனி, சப்போர்ட் பைல்கள் வழங்கப்படும். பழைய பதிப்பினைப் பயன்படுத்துவோர், மால்வேர் மற்றும் வைரஸ் போன்றவற்றைப் பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த எச்சரிக்கையும் மீறி, பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகளைப் பயன்படுத்துவோர், ஹேக்கர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, தங்கள் கம்ப்யூட்டர்களில், சில ரெஜிஸ்ட்ரி மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்https://support.microsoft.com/en-us/kb/3123303 என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

THANKS - THINAMALAR
20 கோடி பதிவுகளைத் தாண்டியது விண்டோஸ் 10

20 கோடி பதிவுகளைத் தாண்டியது விண்டோஸ் 10

K.D.D.

11JAN
2016 
ஒரு சில வசதிக் குறைவுகள் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் சில குறைபாடுகள் என விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் எடுத்திருந்தாலும், சென்ற மாதம், இந்த சிஸ்டம் பதியப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. இது ஒரு பெரிய சாதனையாகும். Winbeta.org என்ற இணைய தளம் இந்த தகவலைத் தந்துள்ளது. ஐந்து மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 4 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 குடியேறியுள்ளது.
ஜூலையில் வெளியான பின்னர், அக்டோபரில், அதாவது மூன்று மாதங்களில், விண்டோஸ் 10, 12 கோடி சாதனங்களில் இயங்கியது. தொடர்ந்து அதே வேகத்தில் இயங்கி, 20 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இப்படியே சென்றால், ஜூலை 2017ல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்கான நூறு கோடி என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
நெட்மார்க்கட் ஷேர் (Netmarketshare) என்ற அமைப்பின் ஆய்வில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், விண்டோஸ் 10, 9% இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம் 56% இடத்தினையும், விண்டோஸ் 8.1, 11% இடத்தினையும் கொண்டுள்ளது. இதிலிருந்து இன்னும் பெரும்பாலானவர்கள், தங்கள் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொள்ள விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
சென்ற நவம்பர் மாதம், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மைக்ரோசாப்ட் வெளியிட்ட முதல் அப்டேட் வந்த பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. பல பயனாளர்கள், புதிய சிஸ்டம் வந்த பின்னர், அதற்கான அடுத்த அப்டேட் வரட்டும் என்றே காத்திருந்தது இதிலிருந்து தெரிய வந்துள்ளது. அதற்கேற்றார் போல், மைக்ரோசாப்ட் நிறுவனமும், நவம்பர் அப்டேட் பைல் மூலம், பல சிக்கல்களுக்குத் தீர்வினையும், பல வசதிகளை எளிமையாகவும் ஆக்கியது.