எதற்கு சதுரகிரி தரிசனம்?

சுந்தர மகாலிங்கமாக, சந்தன மகாலிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் மலை சதுரகிரி.

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஈசன் மகாலிங்கமாக வாசம் புரியும் மலை சதுரகிரி.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி.

வேதங்கள் போற்றும் இறைவன் பரமேஸ்வரன், சுந்தரலிங்கம் மகாலிங்கம் இராசலிங்கம் சந்தனலிங்கம் என்னும் நான்கு திருமேனிகளைக் கொண்டு இச்சதுரகிரி மலையில் எழுந்தருளியிருக்கிறார்.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

ஆனந்த சுந்தரம் என்னும் வணிகனுக்கும் அவனது துணைவி ஆண்டாள் அம்மாளுக்கும் சங்கரநாராயணராகக் காட்சி தந்து எழுந்தருளும் பொருட்டு அருள் வடிவாய் விளங்கும் மூர்த்தி இரட்டைலிங்கர்.
சலசலத்து பாறையின் ஊடே ஓடும் ஓடை, கானகத்தின் குளிர்ச்சி ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான். மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள். அம்மலைகளுக்கு நடுவில் பயணம் தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல், இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் என நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஈசன், சுந்தர மகாலிங்கமாக அருள் பாலிக்கும் அரிய காட்சி. பொதிகை மலையிலிருந்து மூலிகை வளம் காண வந்த அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு, தமது திருமணக் காட்சியை அவருக்குத் தந்தருளிய சுந்தரமகாலிங்க ஸ்வாமிகள் அருள் பாலிக்கும் காட்சி.

பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காகக் காட்சி தந்து லிங்கவடிவாய் எழுந்தருயிருப்பவர் சுந்தர மகாலிங்கர். எண்ணற்ற மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வந்து துதிக்கும் மகாலிங்க ஸ்வாமிகள்.

ஓம் சுந்தரமகாலிங்க ஸ்வாமிக்கு அரோஹரா! சதுரகிரிமலையானுக்கு அரோகரா!
நடப்பதெல்லாம் ஈசன் செயல். ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு? 

உமையொரு பாகராக அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயரில் எழுந்தருளும் பொருட்டு உமையவளால் சந்தனக்குழம்பால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்ட சந்தன மகாலிங்கர். 
ஏறுவதில் ஒரு வகை சிரமம். இறங்குவதிலும், வேறு வகை சிரமம்.
 
ஏதோ காட்சி தேரிவது போன்ற தோற்றம். பிரமை.

இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - 
இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »