ஜன. 12 முதல் உதவிகள் நிறுத்தம்..,.

K.D.D.

11JAN
2016 
மைக்ரோசாப்ட் நிறுவனம், நாளை, ஜனவரி 12,2016 முதல், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கான சப்போர்ட் பைல்கள் வழங்குவதை நிறுத்த உள்ளது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9 மற்றும் 10 ஆகியவை அடங்கும். தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு கட்டாயமாக மாற்றிக் கொள்ளுமாறு, மைக்ரோசாப்ட் வற்புறுத்துகிறது. 
அல்லது, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், எட்ஜ் பிரவுசருக்கு மாறிக் கொள்ள வேண்டும். 
இறுதியாக வெளியிடப்பட்ட, பிழைகள் திருத்தும் சப்போர்ட் பைலுடன், இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.https://www.microsoft.com/en-us/WindowsForBusiness/End-of-IE-support என்ற முகவரியில் இதனைக் காணலாம்.
எனவே, நாளை, ஜனவரி 12 முதல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயலியின், அண்மைக் காலத்திய பதிப்பான, பதிப்பு 11க்கு மட்டுமே இனி, சப்போர்ட் பைல்கள் வழங்கப்படும். பழைய பதிப்பினைப் பயன்படுத்துவோர், மால்வேர் மற்றும் வைரஸ் போன்றவற்றைப் பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த எச்சரிக்கையும் மீறி, பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகளைப் பயன்படுத்துவோர், ஹேக்கர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, தங்கள் கம்ப்யூட்டர்களில், சில ரெஜிஸ்ட்ரி மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்https://support.microsoft.com/en-us/kb/3123303 என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

THANKS - THINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »