மதுரை மாவட்டத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள புல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
புல உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனசுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18-லிருந்து 35 வயதுக்குள், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் 18-லிருந்து 32 வயதுக்குள், இதர பிரிவினர் 18-லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 2015 ஜூலை 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு தவறியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையவர்கள் தங்களது பெயர், முகவரி, கல்வித் தகுதி, பிறந்த தேதி உள்ளிட்டவை அடங்கிய சுயவிவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும். வயது, முகவரி, கல்வித் தகுதி, சாதி, முன்னுரிமை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவற்றுக்கான ஆவணங்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், மதுரை - 625020 என்ற முகவரிக்கு ஜன.29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.