ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,
ஜனவரி 20–ம் தேதி ராமேசுவரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ராமேசுவரம் தீவுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் 15–ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் தீவிர சோதனை செய்யப்படும்.
கோயில் அருகே முக்கிய பிரமுகர்களின் கார்களை நிறுத்த 2 இடங்களில் நிறுத்தமும், 1000 வாகனங்களை நிறுத்தக் கூடிய வகையில் பொது நிறுத்தமும் செய்யப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலை சுற்றிலும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
THANKS - DHINAMANI
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.