உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு...

உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »