மதுரையின் மிக பழமையான திருக்கோயிலான அருள்மிகு செல்லத்தம்மன் திருக்கோயில் பாலாபிஷேகம் வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை சிம்மக்கல் பகுதியில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு செல்லத்தம்மன் திருக்கோயில் உள்ளது. மதுரை வடக்குக் கோட்டையின் காவல் தெய்வமான இத்திருக்கோயில் செல்லி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயில் மார்கழித் திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. புதன்கிழமை அருள்மிகு அம்மன் திருக்கோயில் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வக்கீல் புதுத்தெரு, யானைக்கல் தெரு, வடக்குமாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பக்குளம் சாலை, நாயக்கர்புதுத்தெருவில் காலையில் சப்பரத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
சனிக்கிழமை (ஜன.9) காலை வைகை பகுதியிலிருந்து எடுத்துவரப்பட்ட பால் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் அம்மன் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் மலர்ச்சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.அங்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், செயல் அலுவலர் நா.நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.
THANKS - DHINAMANI
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.