தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் காலியாக உள்ள 1 வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman) பணியிடம் மற்றும் மேதகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை யால் புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் ஆகியவற்றை நிரப்ப இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500
இன சுழற்சி முறை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்), ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்)
பணி இடம்: தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, தரமணி, சென்னை -113, மேதகு ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை -22
தகுதி: ஒளிப்பதிவு(Cinematography) அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் (Sound Recording & Sound Engineering) பிரிவில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழில்நுட்ப பட்டயம் (A Diploma in Filim Technology (Cinematography or Sound Recording & Sound Engineering) அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் (மற்றும்) ஆவணப் பட தயாரிப்பு (அல்லது) செய்தி ஆவனப்படம், தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் Umatic ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: முன்னுரிமை பெற்ற நபர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில் முன்னுரிமை அற்றவர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.