K.D.D.
04JAN2016
பேஸ்புக் இயக்குவதில், நோட்டிபிகேஷன் என்னும் அறிவிப்புகள் நமக்கு அதிகம் தருவது தொல்லைகள் தான். ஒவ்வொரு வகையையும் எப்படி நிறுத்தலாம் என்று கூறியுள்ள டிப்ஸ் மிகப் பயனுள்ளதாக உள்ளது. இனி, எப்போது வேண்டுமோ, அப்போது மட்டும், குறிப்பிட்ட சாதனத்தில் மட்டும், நோட்டிபிகேஷன்களைப் பெற முடியும். உதவிக்கு நன்றி.
ஆர். சீனிவாசன், திருப்பூர்.
வங்கிகளின் இணையப் பதிவுகள், டிஜிட்டல் பதிவுகள், தேடல்கள் என்ற வசதிகள் உள்ள நிலையிலும் கூட, நம் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றிக் காசு கேட்கும் கேடர்களும் இயங்குகின்றனர் என்பதை அறியும் போது பயமாகவும், வியப்பாகவும் உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி இது போன்ற அழிவுப் பாதைக்கும் வழி தருகிறது என்பது வேதனையைத் தருகிறது.
கே.எஸ். பத்மநாபன், சிதம்பரம்.
கீ போர்ட் மடித்து எடுத்துச் செல்லும் வகையில் ரப்பர் ஷீட்டாக ஏற்கனவே கிடைக்கிறது. இருப்பினும் நீங்கள் குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கீ போர்ட் இன்னும் பல வசதிகளைத் தரும் என்றே தெரிகிறது. தகவல் மிக அருமை.
எஸ். நாகராஜன், புதுச்சேரி.
மைக்ரோசாப்ட் தன் ஒன் ட்ரைவ் விவகாரத்தில், தன் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அனைத்தும் இலவசம் என்று போய்க் கொண்டிருக்கும் நிலையில், தன் முந்தைய நிலையை மாற்றி இருக்கக் கூடாது. வேறு வழிகள் கொண்டு, துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தண்டித்திருக்க வேண்டும். மீண்டும் இலவச இடம் அளித்தமைக்காக, வாடிக்கையாளர்கள் நிச்சயம் மகிழ்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பாராட்டுவார்கள்.
எம். வாஜித் அலி, திருச்சி.
தொடர்ந்து ஆண்ட்ராய்ட் பயன்படுத்தி வருகிறோம். தாங்கள் தந்துள்ள குறிப்புகளை இது வரை அறியாமலேயே இருந்துள்ளோம். நீங்கள் தந்துள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் மிகப் பயனுள்ளவையாக உள்ளன. குறிப்பாக 'டெக்ஸ்ட் தோற்றம்' என்ற தலைப்பில் தந்துள்ள விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. நன்றி.
எம். ஆர். நடராஜன், மயிலாடுதுறை.
குரோம் பிரவுசர் டேப்பில் காணப்படும் ஸ்பீக்கர் ஐகானைப் பலமுறை கிளிக் செய்து, ஏன், ஒலிப்பது நிறுத்தப்படவில்லை என்று ஏமாற்றம் அடைந்துள்ளேன். தாங்கள் இது குறித்து குரோம் ட்ரிக்ஸ் என்ற பகுதியில் அளித்த விளக்கத்தைப் படித்த பின்னரே, என் தவறு புரிந்தது. விளக்கத்திற்கு நன்றி.
எஸ். புருஷோத்தம ராஜ், சேலம்.
'ட்ரேக் சேஞ்சஸ்' சேர்த்து பிரிண்ட் எடுப்பதைத் தவிர்க்கும் வழிகளைப் பதிலில் சுட்டிக் காட்டி, அதற்கான அனைத்து படங்களையும் வெளியிட்டது, தங்களின் பொறுமையையும், நிறைவான கற்பிக்கும் ஆர்வத்தையும் காட்டுகிறது. இது போல தெளிவாக மைக்ரோசாப்ட் கூடத் தன் சப்போர்ட் தளத்தில், ஆங்கிலத்தில் வெளியிடவில்லை. ஆசிரியருக்குப் பாராட்டுகள். நன்றி.
எப். லீமா ரோஸ், விழுப்புரம்.
மைக்ரோமேக்ஸ் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லதே. இன்னும் பல புதுமைகளையும் வசதிகளையும் கொண்ட குறைந்த விலை போன்களை இது மக்களுக்கு வழங்கும். ஆனால், அதே நேரத்தில், இந்திய நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவையையும் சிறப்பாக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றன. மைக்ரோமேக்ஸ் இந்தப் பிரிவிலும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
ஆர். சூசை மாணிக்கம். திண்டுக்கல்.