K.D.D.
04JAN2016
மாறாநிலை எழுத்தினை மாற்ற: எக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர் தமிழிலேயே ஒர்க் புக்கினை அமைக்க திட்டமிடுகின்றனர். இவர்கள், தாங்கள் விரும்பும் எழுத்து வகையினை, மாறா நிலை எழுத்தாக எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் உள்ளனர். இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளலாம். கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி பின்னர் கிடைக்கும் விண்டோவில் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில், File டேப் கிளிக் செய்து, அதன் பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. அடுத்து, இடது புறம் Popular (எக்ஸெல் 2007ல்) அல்லது General (எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013ல்) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
3. அடுத்து Excel default font change / When creating new work books என்ற பிரிவில், நீங்கள் விரும்பும் எழுத்து வகை மற்றும் அளவினை அமைத்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.
4. இனி, நீங்கள் அமைத்துள்ள எழுத்து வகையே மாறாநிலை எழுத்தாக, அனைத்து ஒர்க் புக்கிலும் அமையும்.
எக்ஸெல்: கணக்கிடும் வழி: எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்? உடனடியாக, பார்முலாக்கள் செயல்பட்டு, முடிவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது, நாம் மேற்கொள்ளும் மாற்றங்களின் அடிப்படையில் எக்ஸெல் எப்போதும் அப்டேட்டாகவே இருக்கும். இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. பெரிய ஒர்க் ஷீட்டுகளில் செயல்படுகையில் நாம் ஒவ்வொரு செல்லிலும் சென்று நாமாக திருத்தப்படும் டேட்டாவிற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்ற முடியாது. ஆனால், ஒரு சிலர் தாங்களாகவே சில டேட்டாக்களையும், அது சார்ந்த முடிவுகளையும் மாற்ற விரும்புவார்கள். எக்ஸெல் இந்த முடிவுகளைக் கணக்கிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்பவர்களும் உண்டு. மெதுவாகச் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவ்வாறு அமையலாம். அவ்வாறு தாங்களாகவே கணக்கிட்டு அமைக்க விரும்புபவர்கள், எக்ஸெல் தொகுப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உங்களுக்கு Options Options Dialogue Box காட்டும்.
2. இந்த விண்டோவில் உள்ள Calculation என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
3. அதில் Manual என்னும் ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கவும்.
பின் OK கிளிக் செய்திடவும்.
உங்களிடம் எக்ஸெல் 2007 இருந்தால் கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. பின் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதன் இடது பக்கத்தில் உள்ள Formulas என்ற ஏரியாவில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸின் Calculation Options என்ற பிரிவில் உள்ள Manual ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.