மைக்ரோசாப்ட் லூமியா 430.....


K.D.D.

04JAN
2016 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 5,300. பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கான போன் இது. இதில் 4 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 800 x 480 ஆக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது.
எல்.சி.டி. ட்ரான்ஸ்மிஸ்ஸிவ் வகை ஸ்கிரீன் இது. மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. IPv6 சப்போர்ட் செய்யக் கூடிய, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இணைக்கப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இயங்கக் கூடியது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 120.5 x 63.2 x 10.6 மிமீ. எடை 127.9 கிராம். எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன ஆடியோ ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். புளுடூத் 4.0., யு.எஸ்.பி., ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ லான், வை பி ஆகிய தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பினைத் தருகின்றன. பின்புறக் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. அதனைக் காட்டிலும் சற்றுக் குறைவான திறன் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளது. மூன்று வகை சென்சார்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

Share this

Related Posts

Previous
Next Post »