4கே திரை இல்லை.....


K.D.D.

04JAN
2016 
சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள், 2016 ஆம் ஆண்டில் தாங்கள், சோனி (Xperia Z5) வழங்கியது போல, தங்கள் போன்களில், 4கே திறன் கொண்ட திரைகளுடன் ஸ்மார்ட் போன்களைத் தரப்போவதில்லை என அறிவித்துள்ளன. தென் கொரியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. 4K மற்றும் Ultra HD திரைகளை, இந்த இரண்டு நிறுவனங்களும் வழங்கப் போவதில்லை என்று தெரிகிறது.
இதற்குக் காரணமாக, இந்த திரைகள் அமைக்கப்பட்டால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தைத் தவிர்ப்பதற்கான தொழில் நுட்பம் கிடைக்காததே ஆகும். மேலும், அதிகப்படியாகத் தேவைப்படும் மின் சக்தி தேவையினையும் சமாளிப்பதற்கான தீர்வும் கிடைக்கவில்லை. மேலும், 4கே டிஸ்பிளேயில் காட்டும் வகையில், செயலிகள் தங்கள் இமேஜ்களை அமைக்காததும் ஒரு காரணமாக உள்ளது. 
4கே டிஸ்பிளேயில் காட்டப்படக் கூடிய இமேஜ்களை போனில் கொண்டு செல்வதற்கு, 5ஜி அலைவரிசை இணைப்பே சிறப்பாக இருக்கும். அந்த வகை இணைப்பு, தற்போதைக்குப் பரவலாகக் கிடைக்கும் வாய்ப்பும் குறைவாக இருப்பதனால், 4கே டிஸ்பிளே திரை வீண் என்பதே இந்த நிறுவனங்களின் கணிப்பாகும்.

Share this

Related Posts

Previous
Next Post »