தாமரை சாத்தினால் தாலாட்டும் தாயாகலாம்!



குழந்தை இல்லாத பெண்கள் தாமரை மலர் சாத்தி தாயாரை வணங்கினால், தாயாகும் பாக்கியம் பெறலாம். ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவில் கமலவல்லி தாயார் சன்னிதியில் இந்த பிரார்த்தனை நடக்கிறது.
தல வரலாறு: வைகுண்டத்தின் காவலர்களாக ஜெயன், விஜயன் இருந்தனர். ஒரு சமயம் விஷ்ணுவைப் பார்க்க வந்த மகரிஷிகள், அவர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவரை காவலர்கள் தடுக்கவே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள், காவலர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன், இரண்யாட்சன், ராவணன், கும்பகர்ணன், கம்சன், சிசுபாலன் என பிறவிகள் எடுத்து விஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாள் பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே நிற்பதை இங்கு காணலாம்.
முக பாத தரிசனம்: கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில், வலது கையில் தண்டம் பிடித்தபடி இருக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன் குடை பிடிக்கிறார். ஆனி மாதம் 48 நாட்கள் சுவாமிக்கு தைலக்காப்பு செய்யும் போது முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும்.
தாயார் சிறப்பு: இங்குள்ள கமலவல்லித்தாயார் சன்னிதிக்கு பங்குனி உத்திரத்தன்று சுவாமி எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். திருமணமான பெண்கள் தாயாருக்கு தாமரை படைத்து, நெய்விளக்கு ஏற்றி, வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. "கமலம்' என்றால் "தாமரை' என்பதால் தாமரைப்பூ முக்கியத்துவம் பெறுகிறது.
லிங்கப்பாறை ஆஞ்ச நேயர்: ஆஞ்சநேய பக்தரான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் இருக்கிறார். வலது கையை தூக்கியிருக்கும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு: சிவனுக்கு உரிய வில்வம் இத்தலத்தின் விருட்சம். ஆண்டாள், பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு சன்னிதி இருக்கிறது.
இருப்பிடம்: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ.
திறக்கும் நேரம்: காலை 6.00-12.00, மாலை 4.30-இரவு 9.00.
தொலைபேசி: 0424 - 226 7578, 226 4090.


எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »