இழுத்து இயக்கக் கூடிய கீ போர்ட்...


K.D.D.

28DEC
2015 
07:50
கம்ப்யூட்டர் இணைப்பு சாதனங்களைப் பொறுத்தவரை, மவுஸை நாம் அடிக்கடி கீழே போட்டு எடுப்போம். சில வேளைகளில் அது உடைந்து இயங்காமல் போகலாம். அதே போல, கீ போர்ட் வைத்திருக்கும் பலகை அல்லது டேபிள் மேஜையிலிருந்து, கீ போர்டினைக் கீழே விழ வைக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இரண்டும் புளுடூத் முறையில் இயங்குபவையாக இருந்தால், கீழே விழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். கீழே விழுந்தாலும், எந்தவித சேதமும் இன்றி நம்மிடம் திரும்ப வரும் வகையில் கீ போர்ட் ஒன்று அண்மையில், ஒரு வகை ரப்பரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள், 'டை எலக்ட்ரிக் எலாஸ்டோமெர்' (dielectric elastomer) என்னும் ஒரு வகை ரப்பரிலான கீ போர்ட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதனை வளைத்து நிமிர்த்தலாம்; இழுத்து வைத்து இயக்கலாம். இந்த ரப்பர் பொருளை, வேறு எந்த பொருளையும் சுற்றி அமைக்கலாம். இந்த கீ போர்ட் மிக மிக மென்மையானதும் கூட. ஒரே கட்டமைப்பில், இரண்டு அடுக்குகளில், கீ அழுத்தத்தினை உணரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் சென்சார், ஒன்பது வகை நிலைகளை உணரக் கூடியதாக உள்ளது. ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டால், அதில் சேதம் ஏற்படும். ஆனால், பந்தைக் கீழே போட்டால், அது மீண்டும் கூடுதல் விசையுடன் நம்மை நோக்கி வரும்; அல்லது வேறு திசையில் செல்லும். அதே போல, இந்த கீ போர்டினைக் கீழே போட்டால், அது மீண்டும் நம்மை நோக்கி வரும். அதற்கு எந்த சேதமும் ஏற்படாது. இந்த கீ போர்ட் ரப்பரினால் ஆன ஷீட் போல உள்ளது. இதனை வேறு ஒரு பொருளைச் சுற்றியும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது. 
இந்த கீ போர்டில் அமைந்துள்ள சென்சாரைப் பயன்படுத்தி, ஓட்டப் பந்தய வீரர்களின் திறனை எளிதாக அறிய முடியும். StretchSense என்னும் நிறுவனம், இந்த கீ போர்டை வீரர்கள் அணிந்து செல்லும் வகையில், வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »