K.D.D.
28DEC2015
07:50
பலராலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் வழங்கிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரைவில் நம் பழக்கத்தில் இருந்து அறவே நீங்கப் போகிறது. அதன் பல்வேறு பதிப்புகளைப் பயனாளர்கள் தற்போது பயன்படுத்தி வந்தாலும், ஒவ்வொரு பதிப்பின் பயன் தன்மைக்கும், மைக்ரோசாப்ட் இறுதி நாளைக் குறித்துவிட்டது. தற்போதைய பயன்பாட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகளையும், அந்த பயனாளர்கள் தொடர்ந்து என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இந்த கட்டுரை விளக்குகிறது.
வரும் ஜனவரி 12 அன்று, மைக்ரோசாப்ட் அண்மையில் இறுதியாக வெளியிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தவிர்த்து, மற்ற அனைத்து பதிப்புகளுக்கும், சப்போர்ட் பைல்கள் வழங்குவதை நிறுத்திவிடும். எனவே, பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவோர் அனைவரும் கட்டாயம், தற்போதைய பதிப்பிற்கு மாறிக் கொள்வது கட்டாயமாகிறது. ஆனாலும், பெரும்பாலானவர்கள், இது குறித்து கவனத்தில் கொள்ளாமல், தொடர்ந்து பழைய பதிப்பு பிரவுசரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் சிக்கல்களை அறியாமல் உள்ளனர்.
ஒவ்வொரு விண்டோஸ் இயக்க முறைமையிலும் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் அண்மைக் கால பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மைக்ரோசாப்ட் தான் அவற்றைப் பராமரிப்பதற்கென வழக்கமாக பைல்கள் வழங்கும் பழக்கத்தினை நிறுத்த இருப்பதாக அறிவித்து வந்துள்ளது. இருப்பினும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருந்து வருவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கவலையைத் தந்துள்ளது.
டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் மற்ற இருவகை சாதனங்களில், எந்த அளவிற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தப்படுகிறது? இவர்களில், எத்தனை சதவீதம் பேருக்கு, சப்போர்ட் பைல்கள் நிறுத்தப்படவுள்ளன? என்ற தகவல்களை நாம் பார்க்க முயன்றால், பாதிக்கப்படப் போகிறவர்களின் எண்ணிக்கை, நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது.
முதலில் மைக்ரோசாப்ட் தரும் பிரவுசர்கள், எத்தனை பேர் மற்றும் எத்தனை பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன? இந்த கேள்வியைக் கொண்டு, சென்ற செப்டம்பர் 2015 முதல் நவம்பர் 2015 வரை பார்த்த போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு. StatCounter என்னும் அமைப்பு, மைக்ரோசாப்ட் பிரவுசர்கள், பன்னாட்டளவில், 18% பேரால் பயன்படுத்தப்படுகின்றன என்று அறிவித்துள்ளது. இதன் கணிப்பில், கூகுள் குரோம் பிரவுசரே 57% பேரால் பயன்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
பூகோள ரீதியாகக் கணக்கெடுத்து வரும் Net Market Share அமைப்பின் கணிப்பில், மைக்ரோசாப்ட் பிரவுசர்கள், பன்னாட்டளவில் 50.7% பேரால் பயன்படுத்தப்படுகிறது. இது, விண்டோஸ் மட்டுமின்றி, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்களையும் சேர்த்து கணக்கிடப்பட்டதாகும். இந்த கணக்கெடுப்புகளில் சில வேறுபாடுகள் காணப்பட்டாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் எந்த பதிப்பினை எத்தனை பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
விண்டோஸ் 7 அல்லது அதன் பின்னர் வந்த இயக்க முறைமைகளில், அதற்கான அண்மைக்கால பதிப்பினைப் பயன்படுத்துபவர்கள் 50% மேலாக உள்ளனர். இவர்களில், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், எட்ஜ் பிரவுசர் பயன்படுத்துபவர்களும் அடங்குவார்கள். விண்டோஸ் 10 சிஸ்டம் பழக்கத்திற்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பின்னரே, எட்ஜ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது 6.6% பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். விண்டோஸ் 10 பயன்படுத்துவோரில் நான்கில் ஒருவர் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்துகிறார். அப்படியானால், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகளைப் பயன்படுத்துவோர் இன்னும் அதிகமாகவே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10: இந்த பிரவுசர் பதிப்பு 9.3% பேரால் பயன்படுத்தப்படுகிறது. இது விண்டோஸ் சிஸ்டத்தில் இரண்டு டெஸ்க்டாப் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11க்கு மேம்படுத்திக் கொள்வது எளிது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மாறா நிலையில் இதுவே தரப்படுகிறது. எனவே, சப்போர்ட் பைல்களுடன் மைக்ரோசாப்ட் பிரவுசர் வேண்டும் எனில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 10க்கு உயர்த்திக் கொள்வதே நல்லது. பிரவுசருக்காக இல்லாவிட்டாலும், மைக்ரோசாப்ட் பயனாளர்களை எப்படியாவது விண்டோஸ் 10க்கு மாற வைத்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9: இன்றும் கூட, விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தினை சந்தோஷ
மாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பயனாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மொத்த விண்டோஸ் பயனாளர்களில், விஸ்டா பயன்படுத்துபவரகள் 2% எனக் கண்டறியப்பட்டுள்ளது. விஸ்டாவின் இந்த தீவிர பக்தர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மட்டுமே பிரவுசராக உள்ளது. இவர்களுக்கு இன்னும் ஓராண்டுக்கு மட்டுமே பிரவுசருக்கான சப்போர்ட் பைல்கள் கிடைக்கும். ஏன், விஸ்டாவிற்கே சப்போர்ட் பைல்கள், ஏப்ரல் 11, 2017 வரை மட்டுமே கிடைக்கும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8: இந்த பதிப்பினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையினைச் சரியாக உறுதி செய்திட இயலவில்லை என இணைய கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஒரு எண்ணிக்கையைத் தருகிறது. எப்படியும், 5.8% முதல் 23.5% பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் எக்ஸ்பியில் செயல்பட்ட இறுதி பிரவுசர் இதுதான். சில நிறுவனங்கள், தங்களின் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஐ பயன்படுத்தி வருகின்றன. ஏனென்றால், ஏற்கனவே தங்கள் நிறுவனங்களுக்கெனத் தயாரித்த அப்ளிகேஷன்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ல் சரியாக இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை மேம்படுத்தப்பட்ட பிரவுசர்களுக்கேற்ற வகையில் மேம்படுத்தாமல் அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டால், நிறுவனப் பொறியாளர்கள், Enterprise Mode for Internet Explorer 11 ல் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்களை அமைக்க வேண்டியதிருக்கும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் முந்தையவை: மைக்ரோசாப்ட் பிரவுசர்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் முந்தைய பிரவுசர்களை யாராவது பயன்படுத்தி வந்தால், அவர்கள் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு இவற்றைக் கொண்டிருந்தால், நிச்சயம் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திப்பார்கள்.
ஆனால், அவர்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 ஆக இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11க்கு இவர்கள் மாறிக் கொள்வது நல்லது.
எனவே, வரும் ஜனவரியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரினைப் பயன்படுத்தும் 25% பேர் தங்கள் பிரவுசருக்கான இறுதி செக்யூரிட்டி அப்டேட் பைல்களைப் பெற இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து சுருங்க ஆரம்பிக்கும். ஏனென்றால், விஸ்டா சிஸ்டம் கட்டாய ஓய்வு பெற உள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டம் மேம்படுத்தப்பட உள்ளது. இருந்தாலும், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்பினைப் பயன்படுத்துபவர்கள், 2016 ஆம் ஆண்டில் நிச்சயம் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.
நூறு கோடி சாதனங்களில், தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையைப் பதிக்க திட்டமிடும் மைக்ரோசாப்ட், இந்த பிரவுசர் சந்தையை அதற்கான கருவியாகப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குச் சிக்கலைக் கொடுத்து, எட்ஜ் பிரவுசருக்கு மக்களை மாறச் சொல்லி, அதற்கான அடிப்படை இயக்கமான விண்டோஸ் 10 இயக்கத்தினைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. நிச்சயம் இந்த முயற்சியில் மைக்ரோசாப்ட் வெற்றி பெறும். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் காணாமல் போகும் என்பது உறுதி.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAMALAR