தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 375
எலக்ட்ரிக்கல் - 300
மெக்கானிக்கல் - 25
சிவில்  - 50
சம்பள விகிதம்: 10,100-34,800 + தர ஊதியம் 5,100 (மாதந்தோறும்)
தகுதிகள்:
கல்வி:
பொறியியலில் பட்டம் (EEE/ECE/EIE/CSE/IT/Mehanical/Production/Industrial/Manufacturing/Civl ஆகிய ஏதாவது ஒரு பிரிவில்)
அல்லது
AMIE (Section A and B)-ல் தேர்ச்சி (Electrical/Mechanical/Civil ஆகிய ஏதாவது ஒருபிரிவில்)
வயது:
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) மற்றும் விதவைகளுக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகப்பட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
பிற வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 30.
தேர்வு கட்டணம்:
பிற வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) - ரூ. 500
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்)- ரூ. 250
விண்ணப்பங்களை இணையவழியாக (ஆன்-லைன்) மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதோடு மின்வாரியத்தில் ஒராண்டு பயிற்சி (Graduate Apprenticeship Training)  முடித்திருத்தல் வேண்டும்.
முக்கியமான தேதிகள்
அறிவிக்கை வெளியான தேதி: 28-12-2015
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி நாள்:11-01-2016
தேர்வு கட்டணங்களை செலுத்துவற்கு (கனரா மற்றும் இந்தியன் வங்கி மூலம்) கடைசி நாள்: 13-01-2016
இதுகுறித்த மேலும் விவரங்களை பெறுவதற்கு www.tangedco.gov.inஎன்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »