
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டிக் கொண்டு........
"சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.
இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.
உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி ...
Click Here The Details.....
முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாவது ...
நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்!
ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.
இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.
மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,
எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.
ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.
திக் பாலகர்களில் இவன் "ஈசானன்".
அக்னியில் "சிவாக்னி"
அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.
வித்யைகளில் பர வித்யை.
யோகங்களில் அஷ்டாங்க யோகம்.
ஞானங்களில் இவன் சிவ ஞானம்.
ஆண்டியாகப் போன முருகரிடம் சிவபெருமான் அன்புடன் கூறியது .....
"மைந்தா! நானும், சக்தியும் நீயன்றோ! தத்வமசி வாக்கியப் பொருள் நீ என்ற படி, என்னுடைய ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து உனக்கு ஆறு முகங்களாயிற்று! என்னைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், நின் அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் உனக்கேயாகும். உன்னை பூஜித்தவர் எங்கள் இருவரையும் பூஜித்தவராகிறார்."
இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.
இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
இதையே ஒரு சித்தர்
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி
என்கிறார்.
மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.
நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை "சண்முகம்" என்பர் பெரியோர்.
இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை "சுப்ரமண்யம்" என்பார்கள்.
இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் "சண்முகம்" என்பார்கள்.
நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருந்திருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு "குகன்" என்ற பெயர் ஏற்பட்டது. "குஹ்யம்" என்ற சொல்லுக்கு "மிக ரகசியமானது" என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் "குகன்" என்ற பெயர் பெற்றான் என்றும் கூறுவார்.
வள்ளி, தேவசேனா இருவரின் தத்துவத்தை; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.
தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.
மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே "மலையின்" தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற "ஞானமே முருகன்". அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.
தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே "சத்திய வாக்காகி" விடும்.
"சரவணபவ" என்கிற மந்திரத்துக்கு முன் ...
"ஓம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.
"ஓம் ஹ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.
"ஓம் க்லீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.
"ஓம் ஐம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.
"ஓம் ஸ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா"
என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய "ஸப்ரஹுமண்ய புஜங்கம்"
Śrī Subrahmanya Bhujangam by Adi Shankara Acharya.
Click Here The Details....
Click Here The Details....
"சுப்ரமண்ய சஹஸ்ரநாமாவளி"
Click Here The Details....
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.