K.D.D.
04JAN2016
வளர்ந்து வரும் நாடுகளில், இணைய இணைப்பு கிடைக்காத மக்களுக்கு, அவர்களின் வாழ்வியல் நடைமுறைக்கான சில சேவைகளை, இலவசமாகத் தரும் திட்டத்தினை, பேஸ்புக் நிறுவனம் Internet.org என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில், இதன் பெயரை அண்மையில் Free Basics என மாற்றியது. வளரும் நாடுகளில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களைத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, பேஸ்புக் அழைத்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மொபைல் சேவை வாடிக்கையாளர்கள், இலவசமாக இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். தற்போது, இந்திய அரசின், தொலை தொடர்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் ட்ராய் என்னும் அமைப்பு (Telecom Regulatory Authority of India (TRAI)), இந்த திட்டத்தினைப் பின்பற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. சென்ற டிசம்பர் 23ல் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
”அனைவருக்கும் சமமான இணைய சேவை” என்னும் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என தெற்காசிய நாடுகளில், பரவலாக, பேஸ்புக் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்ததால், இந்த தடையினை ட்ராய் விதித்துள்ளது.
Free Basics திட்டமானது, நல்லெண்ண நோக்குடன் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைத் திட்டமே என்று கூறி வரும் பேஸ்புக் நிறுவனம், இந்தியப் பயனாளர்களை, ட்ராய் அமைப்பிற்கு, இந்த திட்டத்திற்கு ஆதரவாக செய்தி அனுப்பும்படி பலவகையான விளம்பரங்கள் வழியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.