பட்டதாரிகளுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தில் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தில்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social Worker
காலியிடங்கள்: 23
வயதுவரம்பு: 18 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Work துறையில் எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுMSW பட்டம் பெற்று Social Development Sector துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Social Work துறையில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BSW பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஹிந்தி மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiss.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் பயோடேட்டாவையும் இணைத்து delhi.spcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது அஞ்சல் முகலம் அனுப்ப வேண்டும்.
Ms.Trupti Jhaveri Panchal, Asst.Professor, School of Social Work, Tata Institute of Social Science, V.N.Purav Marg, Deonar - 400 088.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tiss.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »