K.D.D.
04JAN2016
நீங்கள் இணையத்தில் இணைந்திருக்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, உங்களால் இணைய இணைப்பினைப் பெற முடியாத நிலையில், குறிப்பிட்ட இணைய தளத்தினைக் காண இயலாத நிலையில், அதனை கம்ப்யூட்டருக்குக் கொண்டு வராத நிலையில், பிரவுசர் அது என்ன வகையான பிழை என நமக்கு ஒரு பிழைச் செய்தியைத் தருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், பிழைச் செய்தி தரும் தகவல் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. 400 / 500 என்ற எண் தொடக்கமாக் கொடுக்கப்பட்டு, பிழை என்னவெனச் சுருக்கமாகக் காட்டப்படுகிறது. இந்த வகையில் நாம் அடிக்கடி சந்திக்கும் சில பிழைச்செய்திகளை இங்கு காணலாம்.
400 எண்ணில் தொடங்கும் எண்களுடன் கூடிய பிழைச் செய்திகள் பெரும்பாலும் நான்கு வேறுபட்ட பிழைச் செய்திகள் இருக்கும். அவை:
400 - Bad Request இதன் பொருள், நீங்கள் கொடுத்தனுப்பிய தேவை, இணைய முகவரி- (URL) சரியாக அமைக்கப்படவில்லை. எனவே, நீங்கள் அந்த இணைய முகவரியினைச் சரியாக அமைத்து எண்டர் செய்தீர்களா என்று சோதனை செய்திடவும். அல்லது அந்த இணையப் பக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் (Refresh) கொடுக்கவும். சில வேளைகளில், நீங்கள் முகவரியைச் சரியாக டைப் செய்து, எண்டர் செய்து அனுப்புகையில், இணைய இணைப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, அந்த முகவரி சரியாக அனுப்பப்பட்டிருக்காது. இது போன்ற சந்தர்ப்பங்களில், புத்துயிர் கொடுப்பது தீர்வைத் தரலாம்.
401 - Unauthorized: இந்த ஒரு சொல்லே உங்களுக்குத் தெளிவாக பிழையைக் காட்டுகிறது. இந்த பிழைச் செய்தி கிடைத்தால், அந்த தளத்தில் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை என்று பொருள். அல்லது நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் ஐ.பி. முகவரிக்கு அனுமதி இல்லை என்று பொருளாகிறது. எனவே, உங்களைப் பற்றிய தகவல்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும்.
404 - Not Found: இது நாம் அடிக்கடி பெறும் பொதுவான பிரவுசர் பிழைச் செய்தியாகும். நீங்கள் காண முயற்சிக்கும், இணைப்பு பெற முயற்சிக்கும் இணையப் பக்கம் அல்லது இணைய தளம், இணைய இணைப்பில் இல்லை என்பது இதன் பொருள். இணைய முகவரியைச் சோதனை செய்து சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அல்லது முயற்சிக்கு புத்துணர்வு கொடுக்க வேண்டும். இந்த இரண்டு முயற்சிகளிலும், இணையப் பக்கம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் தந்துள்ள முகவரியில் நிச்சயம் தவறு உள்ளது என்று பொருளாகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட அந்த இணையப் பக்கம் உள்ள தளத்தின் ஹோம் பேஜ் சென்று, பின்னர், நீங்கள் தேடும் பக்கத்தினைப் படிப்படியாகத் தேடிப் பார்க்கவும். அல்லது ஹோம் பேஜில், நீங்கள் காண விரும்பும் பக்கத்தினை, தேடல் கட்டத்தில் கொடுத்துத் தேடல் மூலமும் பார்க்கலாம்.
408 - Request Timeout : உங்கள் பிரவுசர், உங்களிடமிருந்து குறிப்பிட்ட கால வரையறையில், ஒரு பதிலை எதிர்பார்க்கிறது. அதனை அந்த காலத்திற்குள் தரவில்லை என்றால், இந்த பிழைச் செய்தி காட்டப்படும். மேலும், இந்த பிழைக்கான செயல்பாடு, உங்கள் இணைய இணைப்பு சரியில்லை என்றாலும் கிடைக்கலாம். அல்லது, நீங்கள் உங்கள் பதிலை அனுப்பும் தளம் உள்ள சர்வரில் பிரச்னை இருந்தாலும் ஏற்படலா. சில நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் முயற்சி செய்தால், நிச்சயம் தீர்வு கிடைக்கலாம்.
மேலே சொல்லப்பட்ட பிழைகள் எல்லாம், நாம் ஏற்படுத்தும் சாதாரண பிழைகளால் ஏற்படுபவையே. இது குறித்து அதிகம் கவலை கொள்ளாது, நம் இணைய தேடலைத் தொடரலாம்.
500 எண்ணில் தொடங்கும் எண்களுடன் கூடிய பிழைச் செய்திகள் மிகச் சிக்கலான பிழைகளாகவே இருக்கும். பெரும்பாலும், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் சர்வரில் ஏற்பட்டுள்ள பிழைகளையே இவை குறிக்கும். எனவே, நீங்களாக பிழைக்கான தீர்வைக் காண இயலாது. ஒரு நாளில், குறிப்பிட்ட கால நேரத்தில், அல்லது குறிப்பிட்ட இணைய தளங்கள் சார்ந்து இந்த பிழைச் செய்திகள் கிடைத்தால், அந்த தளங்களின் உரிமையாளர்களுக்கு, பிழைகள் ஏற்படும் கால நேரம், சூழ்நிலை, உங்கள் சிஸ்டம் குறித்த தகவல்களுடன் ஓர் அறிக்கையை அனுப்பி வைக்கலாம். 500 எண் தொடர்ந்து கிடைக்கும் பிழைச் செய்திகள் பின்வருமாறு.
500 - Internal Server Error: நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் சர்வரில் ஏற்பட்டுள்ள பிழையை இது குறிக்கிறது. இது பொதுவான பிழைச் செய்தியாகும். ஏற்பட்டுள்ள பிழை எந்த வகையினது என்று சுட்டிக் காட்டப்படவில்லை.
502 - Bad Gateway: இரண்டு சர்வர்களுக்கிடையே சரியான முறையில் தகவல் பரிமாற்றம் ஏற்படவில்லை எனில், இந்த பிழைச் செய்தி கிடைக்கும். இணைய தளப் பயன்பாட்டில், புதிய பக்கம் ஒன்றைக் கொண்டு வருகையில், லாக் இன் செய்திடுகையில், வர்த்தக இணைய தளங்களில் பொருட்கள் ஆர்டர் செய்கையில் இது போன்ற பிழைச் செய்திகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
503 - Service Unavailable: இந்த பிழை தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ ஓர் இணைய தளத்தில் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. சுருக்கமாக, அந்த குறிப்பிட்ட இணைய தளம் இப்போது கிடைக்காது என்பதையே இது சொல்கிறது. எனவே, சில நிமிடங்கள் அல்லது மணி நேரம் கழித்து, மீண்டும் இதனைப் பெற முயற்சிக்கலாம். சில வேளைகளில், குறிப்பிட்ட ஒரு தளத்தினை, அளவுக்கதிகமானவர்கள் அணுக முயற்சிக்கும் போதும், இந்த பிழை ஏற்படும். சில தளங்கள், இது போன்ற சூழ்நிலையில், தளத்தில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற செய்தியைத் தயாராக வைத்திருந்து காட்டும் வகையில், தளத்தினை வடிவமைத்து வைத்திருப்பார்கள். 503 பிழைச் செய்தி அப்போது காட்டப்பட மாட்டாது.
504 - Gateway Timeout: இது 408 என்ற எண்ணில் கிடைக்கும் Request Timeout என்ற பிழைச் செய்தி போன்றதே. 408 பிழைச் செய்தி, உங்களுக்கும் நீங்கள் விரும்பும் இணைய தளம் உள்ள சர்வருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இங்கே 504 பிழைச் செய்தி, இரண்டு சர்வர்களுக்கிடையேயான இணைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து சொல்கிறது. ஏதேனும் ஒரு சர்வர் தன் நிலையை இழந்திருக்கலாம்; அல்லது தற்காலிகமாக இணைப்பிற்குக் கிடைக்காமல் இருக்கலாம். சில மணித்துளிகள் அல்லது மணி நேரத்தில் இந்த தளம் கிடைக்கும்.
மற்ற வகை பிழைச் செய்திகள்: மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள 400 / 500 எண்கள் சார்ந்த பிழைச் செய்திகள் தவிர, வேறு சில பொதுவான பிழைச் செய்திகளும், அவ்வப்போது பிரவுசரால் காட்டப்படும். இவை விளக்கமாக, குறிப்பிட்ட சிக்கல் என்னவென்று காட்டும் வகையில் அமைந்திருக்கும். இங்கு பொதுவாகக் கிடைக்கும் இது போன்ற பிழைச் செய்திகளைக் காணலாம்.
Certificate errors: நீங்கள் காண விரும்பும் இணைய தளம், சட்ட பூர்வமான பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றிருக்காவிட்டால், அல்லது பெற்றிருந்து, அந்த சான்றிதழின் காலம் முடிந்திருந்தால், அல்லது சான்றிதழே இல்லாமல் இருந்தால், இந்த பிழைச் செய்தி காட்டப்படும். குறிப்பிட்ட இணைய தளத்தின் சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டும். அல்லது பெறப்பட வேண்டும். இது போன்ற சான்றிதழ் சிக்கல் உள்ள இணைய தளங்களைப் பார்க்காமல் இருப்பது நல்லது. அல்லது அந்த இணைய தளத்தின் உரிமையாளருக்கு அஞ்சல் அனுப்பி, பிரச்னை என்ன என்று கேட்டு அறியலாம்.
Security warnings: அனைத்து பிரபலமான பிரவுசர்களும், பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளை, அதற்கான பாதுகாப்பான செயலிகளைக் கொண்டே இயங்கி வருகின்றன. இவை எப்போதும் இயங்கி, மால்வேர் மற்றும் வைரஸ் கொண்டுள்ள இணைய தளங்களை நீங்கள் காண முயற்சிக்கையில், இது போன்ற எச்சரிக்கை செய்தியை வழங்குகின்றன. நாம் பிரவுசர் அமைப்பினை அமைக்கையில், பாதுகாப்பு அமைப்பினை High, Low அல்லது Medium என அமைக்கலாம். High என அமைத்துவிட்டால், இது போன்ற பாதுகாப்பு பிழைச் செய்தி அடிக்கடி கிடைக்கும். அது நல்லதுதான். ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்து பார்த்த பின்னர், அந்த இணைய தளம் பார்ப்பது குறித்து முடிவு செய்திடலாம்.
நாம் பிரவுசரில் அமைத்துள்ள ப்ளக் இன் புரோகிராம்கள் அல்லது ஆட் ஆன் புரோகிராம்களினாலும், நமக்கு பிழைச் செய்திகள் கிடைக்கும். சில செயலிகளை நாம் தரவிறக்கம் செய்திடுகையில் அல்லது சில தளங்களைப் பார்க்கையில், இது போன்ற ஆட் ஆன் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும். அவை நம் அனுமதியின்றி இயங்கத் தொடங்குகையில், நம் பிரவுசர் பிழைச் செய்தியை அளிக்கும். அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனலில், Add or Remove Programs பிரிவு சென்று, நம் அனுமதி இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை நீக்க வேண்டும்.
சில வேளைகளில், நம் கம்ப்யூட்டர் குறிப்பிட்ட இணைய தளத்தினை இணைக்க முடியவில்லை என்று செய்தி கிடைக்கும். அப்போது வேறு ஏதேனும் தளத்தினை இணைத்துப் பார்க்கலாம். அதுவும் இணையவில்லை என்றால், கம்ப்யூட்டரின் நெட்வொர்க் அமைப்பினைச் சோதனை செய்வது தீர்வினைத் தரும். உங்களுக்கு இணைய இணைப்பு தரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டு சிக்கல் குறித்து கூறினால், அவர்கள் தீர்வினைத் தருவார்கள். இணைப்பு உங்கள் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரைச் சரியாகவே உள்ளது என்று கூறினால், ரெளட்டரை அல்லது மோடத்தினை கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள கேபிள்கள் அனைத்தையும் நீக்கி, பின் மீண்டும் இணைத்து, இணைய இனைப்பிற்கு முயற்சிக்கவும்.