மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் க்யூ 395...

K.D.D.

04JAN
2016 
சென்ற நவம்பரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில் Micromax Canvas Mega E353 என்னும் ஸ்மார்ட் போனை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது Micromax Canvas Amaze Q395 வெளியாகியுள்ளது. இதனை இ பே டாட் இன் வர்த்தக தளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.
இதன் திரை 5 அங்குல அளவில், ஹை டெபனிஷன் அம்சத்துடன் உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 . இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6580 ப்ராசசர் இயங்குகிறது. இதன் DDR3 ராம் மெமரி, 2 ஜி.பி. அளவில் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 5.0. லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் பின்புறக் கேமரா, ஆட்டோ போகஸ் திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு 13 எம்.பி.திறனுடன் தரப்பட்டுள்ளது. முன்புற செல்பி கேமரா 5 எம்.பி. திறனுடன் உள்ளது. இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இசைப் பிரியர்களுக்கு, எப்.எம். ரேடியோவும், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இணைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 7,999 என அறிவிக்கப்பட்டுள்ளது..

THANKS - DINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »