முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவார். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தார் .
மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய','கோனேரின்மை கொண்டான்','கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றார் .கேரளம்,கொங்குநாடு,சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறியவருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி1279இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி1284இல் தனது படைத்தலைவன் ஆரிய சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தார் . புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான; கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றார் .
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மைந்தர்கள், சுந்தர பாண்டியன்,வீரபாண்டியன், இடையே எழுந்த உரிமைச்சண்டையை பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
குலசேகரன் அரசவையில் தாகியதீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல்பட்டிணம், பிடான்,மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அராபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார்
மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவார் .
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.பழமுதிர்ச்சோலைஅழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.திருமலைநாயக்கர் மகால்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது.