K.D.D.
21DEC2015
08.40
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தங்கள் சிஸ்டங்களில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்படுத்தி வருபவர்களில், பெரும்பாலானவர்கள், ஏன் ஏறத்தாழ ஒரே மாதிரியான வேலை பார்க்க இடம் தர, கண்ட்ரோல் பேனல் மற்றும் செட்டிங்ஸ் என இரண்டு பிரிவுகள் உள்ளன என்று வியப்படைகிறார்கள். ஒரு சிலர் இது குறித்து குழப்பமும் அடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட செட்டிங்ஸ் (settings) மெனுக்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து வந்தவையாகும். ஆனால், பயனாளர்கள், தங்களுக்கு வேண்டிய செட்டிங்ஸ் அமைப்புகளை Settings விண்டோவிலேயே மேற்கொள்ளலாம். விண்டோஸ் 10 ஐப் பொருத்த வரை, இரண்டு விண்டோ திரைகளும் (Control Panel மற்றும் Settings) கிடைக்கின்றன. இவை தேவையற்று இருப்பது போல தோன்றினாலும், இதில் மேற்கொள்ளப்படக் கூடிய செயல்பாடுகளில், சிறிய வேறுபாடு இருக்கிறது.
மைக்ரோசாப்ட் டேப்ளட் பி.சி. மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் என இரண்டு வகை சாதனங்களிலும் செயல்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வடிவமைக்க எண்ணித் திட்டமிட்டது. டேப்ளட் பயனாளர்கள், தங்களுக்கு வேண்டிய அனைத்தையுமே, ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்கள் இந்த செயல்பாடுகளை மேற்கொள்ள தங்கள் நேரத்தைப் பெரும்பாலும் டெஸ்க்டப் நிலையிலேயே செலவிடுவார்கள் என எண்ணியது. அதனால்,, ஒவ்வொரு நிலையும், செட்டிங்ஸ் மேற்கொள்ள அதனதன் வழியில் செயல்படுகின்றன. கண்ட்ரோல் பேனல், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைத்த அதே செட்டிங்ஸ் அமைப்பினை பயனாளர்களுக்குத் தருகிறது. ஆனால், அதே நேரத்தில், 'செட்டிங்ஸ்' திரை அதே அமைப்பில் சில துணைப் பிரிவுகளையும் கொண்டு, கூடுதலான சில வசதிகளையும் காட்டுகிறது. மேலும், டேப்ளட் மற்றும் தொடு உணர் திரை சாதனங்களில் இவை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முதன்மையான நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டவை.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நமக்குத் தரப்படும் இடைமுக செயலியைச் (interface) சிலர், “பைத்தியக்காரத்தனமாக” தொடர்பின்றி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி வந்தனர். எனவே, விண்டோஸ் 10 இடைமுகச் செயலியைச் சிறப்பான தொடர்பு உள்ளதாக அமைத்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் எண்ணியது. அது, டேப்ளட் பி.சி. மட்டுமின்றி, பெர்சனல் கம்ப்யூட்டரிலும் மற்ற மொபைல் சாதனங்களிலும் அவ்வகையில் செயல்பட வேண்டும் எனத் திட்டமிட்டது.
தொடக்கத்தில், மைக்ரோசாப்ட், கண்ட்ரோல் பேனல் மற்றும் செட்டிங்ஸ் என்ற இரண்டு பிரிவுகளையும் நீக்கிவிட்டு, ஒரே இடத்தைத் தர எண்ணியது. இந்த ஒரே இடத்தில், பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து அமைப்பு மாற்றங்களையும் மேற்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டது. ஆனால், இறுதியில், மைக்ரோசாப்ட் இரண்டு பிரிவுகளிலும், பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைத்துத் தந்துள்ளது.
விண்டோஸ் 10 செட்டிங்ஸ் விண்டோ, தொடு உணர் திரையினை முதன்மை நோக்கமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. விண் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிடைக்கும் அனைத்து செயல் வடிவமைப்பு மாற்றங்களையும் இதில் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், கண்ட்ரோல் பேனல் பிரிவும் தரப்பட்டுள்ளது. ஆனால், பயன்களைப் பொறுத்தவரை, அது தரும் செயல் வடிவமைப்பு மாற்றங்களுக்கான இடங்களைப் பொறுத்தவரை சற்றுக் குறைவாகவே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும், முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கிடைத்த வசதிகளை அமைத்துப் பயன்படுத்தும் வகையிலேயே உள்ளது. ஒரு சிலர், கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் செயல் வடிவமைப்புகளிலேயே, தங்களுக்குத் தேவையானதை மேற்கொண்டு செயல்பட்டாலும், பயனாளர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வடிவமைப்பு வழிகள் “செட்டிங்ஸ்” விண்டோவில் தான் கிடைக்கின்றன.

THANKS - COMPUTER MALAR