வளைந்து கொடுத்த மைக்ரோசாப்ட்


K.D.D.

28DEC
2015 
08:00

சென்ற மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஒன் ட்ரைவில் வாடிக்கையாளர்களுக்குத் தரும் இலவச இடத்தின் அளவை, 15 ஜி.பி.யிலிருந்து 5 ஜி.பி. ஆகக் குறைக்கும் முடிவை அறிவித்தது. அத்துடன் கேமரா ரோல் என்ற பெயரில் தரப்படும் இலவச 15 ஜி.பி. திட்டத்தினை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. இவை, வரும் 2016 தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும், பன்னாட்டளவில் எதிர்த்தனர். https://onedrive.uservoice.com/forums/262982-onedrive/suggestions/10524099-give-us-back-our-storage என்ற வலைத்தளத்தில் 72 ஆயிரம் பேருக்கு மேலாக, எதிர்ப்பு தெரிவித்தனர். யாரோ சிலர் இந்த சலுகையைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக, ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வழங்கப்படும் சலுகையினைத் திரும்பப் பெறுவது அநியாயம் என்று குரல் எழுப்பினர். இதனைக் கவனித்த, மைக்ரோசாப்ட் தன் முடிவில் சற்றுப் பின் வாங்கியுள்ளது. புதிய முடிவினை https://onedrive.uservoice.com/forums/262982-onedrive/status/1760913 என்ற வலைத் தளத்தில் தெரிவித்துள்ளது.
தன் நியாயமான வாடிக்கையாளர்களுக்கு, இலவச 15 ஜி.பி. அளவு இடம் தர ஒத்துக் கொண்டுள்ளது. அதே போல, ஏற்கனவே 15 ஜி.பி. கேமரா ரோல் ஸ்டோரேஜ் இடம் கொண்டிருந்தவர்கள், வரும் ஜனவரிக்குள் மீண்டும் கேட்டுப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. preview.onedrive.com/bonus என்ற தளத்தில் இது குறித்த தங்கள் விண்ணப்பங்களைப் பதியலாம். ஆனால், மற்ற இடக் குறைப்பு, கட்டணம் செலுத்துதல் போன்றவற்றில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவை கீழே தரப்பட்டுள்ளன.
புதிய ஒன் ட்ரைவ் மாற்றங்கள்
ஆபீஸ் 365 ஹோம், பெர்சனல் அல்லது யுனிவர்சிட்டி சந்தாதாரர்களுக்கு, அளவின்றி ஸ்டோரேஜ் இடம் இனி தரப்பட மாட்டாது. இந்த சந்தாதாரர்களுக்கு, ஒன் ட்ரைவில் 1 டெரா பைட் இடம் தரப்படும். அளவற்ற ஸ்டோரேஜ் வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் இடம் பெற்றிருந்த சந்தாதாரர்கள் அதனை இன்னும் 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒன் ட்ரைவில் இலவச இடம் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள், 5 ஜி.பி. அளவிற்கு மேல் பைல்களைத் தேக்கி வைத்திருந்தால், அவர்களுக்கு ஓராண்டு ஆபீஸ் 365 இலவச இடம் அளிக்கப்படும். இது 1 டெரா பைட் இடத்தினையும் கொண்டதாகும். கட்டணம் செலுத்தி 100 மற்றும் 200 ஜி.பி. இடம் பெறும் திட்டங்கள் கைவிடப்படுகின்றன. அதற்குப் பதிலாக, 2016 தொடக்கம் உதல் மாதம் 1.99 டாலர் செலுத்தி, 50 ஜி.பி. இடம் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆபீஸ் 365 சந்தாதாரர் ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், 1 டெரா பைட் அளவிற்கு மேலாக பைல்களைத் தேக்கி வைத்திருந்தால், இந்த மாற்றங்கள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, 1 டெரா பைட் அளவிற்குக் கூடுதல் அளவிலான பைல்கள் 12 மாதத்திற்கு மட்டும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். தற்போது 100 அல்லது 200 ஜி.பி. இடம் பெறும் திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தாது. மைக்ரோசாப்ட் தன் ஒன் ட்ரைவ் திட்டங்களில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும், இந்த மாற்றங்களுக்கான அறிவிப்பினால், தங்கள் ஏமாற்றமடைந்ததாகக் கூறிய வாடிக்கையாளர்கள் போன்றவர்களுக்கான பழைய வசதிகள் தொடர்ந்து தரப்படுகின்றன என்று அறிவித்துள்ளது.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »