இந்திய விமானப் படையில் பல்வேறு பணிகளில் ‘கமிஷன்ட் ஆபீசராக’ பணியாற்றுவதற்கான பொது தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி Flying Branch - SSC for men and Women No:201/17F/SSC/ M&W- Commissioned Officers:
வயது: 01.01.2017 தேதியின்டி 20 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதப் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: உயரம்: 162.5 செ.மீ., கால்நீளம்: 99 செ.மீ முதல் 120 செ.மீ வரை. உட்கார்ந்திருக்கும் போது உயரம்: 81.5 செ.மீ முதல் 96 செ.மீ வரை.
பணி: Technical Branch - Commissioned Officers
அ. No. 200/17T/PC/M (Permanent Commission for men).
ஆ. No. 200/17T/SSC/ M&W (SSC for men & Women).
வயது: 01.01.2017 தேதியின்படி 20 - 26க்குள் இருக்க வேண்டும்..
தகுதி: Electronics, Mechanical ஆகிய பாடங்களை முக்கிய பாடமாகக் கொண்டு Aeronautical Engineering படிப்பை முடித்து பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முக்கிய பாடப் பிரிவுகள் பற்றிய முழு விவரம் இணையதளத்தை பார்க்கவும்.
பணி: Ground Duty Branches - Commissioned Officers
அ. No. 200/17G/PC/M (Permanent Commission for men).
ஆ. No. 200/17G/SSC/M&W (Short Service Commission for men and women).
வயது: 01.01.2017 தேதியின்படி 20 - 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.காம்., எம்.காம், சிஏ, ஐசிடபிள் யூஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய விமானப் படை கல்விப் பிரிவில் பணி்புரிய குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப் படையால் நடத்தப்படும் Air Force Common Admission Test (AFCAT) - 2016 தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை (சூலூர்), தஞ்சாவூர். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜனவரி 2017 லிருந்து பயிற்சி தொடங்கும்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு இந்திய விமானப் படையில் அதிகாரி பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015.
மேலும் விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.