நாகை மாவட்டம், திருக்குவளை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் அருந்ததியினர் பிரிவினர் இப்பணிக்குத் தகுதியானவர்கள். குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி. அதிகபட்ச வயது வரம்பு 35. விண்ணப்பத்தில் வேலைவாய்ப்பக பதிவு எண் குறிப்பிடப்பட வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்குவளை என்ற முகவரிக்கு ஜன. 11-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.