வேர்ட் டிப்ஸ்!

K.D.D.

21DEC
2015 
08.40
செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்: வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.
1. நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் டெக்ஸ்ட் பகுதியின், இடது மேல் மூலையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்து Ctrl+Shift+F8 அழுத்தவும். பின்னர், அப்படியே நீங்கள் எந்த கேரக்டர் வரை கர்சரை நீட்ட வேண்டுமோ, அது வரை கொண்டு சென்று, அப்படியே கீழே இழுக்கவும். இதற்கு மவுஸைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், Alt கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.
3. தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், வழக்கம்போல, நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை என்ன என்ன மாற்றங்களுக்கு உட்படுத்துவீர்களோ, அவ்வளவும் பயன்படுத்தலாம். காப்பி செய்திடலாம். பேஸ்ட் செய்திடலாம். இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லலாம். நீக்கலாம். 

வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திடலாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.
1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனையிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப்பட்டு கிடைக்கும். 
2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள். 
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்க வும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும். 
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும். 
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை பத்து செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும். 
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந் தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்த மைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல. 
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட. 
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.
THANKS -COMPUTER MALAR

Share this

Related Posts

Previous
Next Post »