இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!

K.D.D

23DEC
2015 
21:35
ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.
ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.
இதுகுறித்து கூகுள் மேப்ஸ் டைரக்டர் சுரேன் ருஹேலா கூறுகையில், “டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்குமாறு செய்துள்ளோம். இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்‌ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள் வெகுவாகப் பயனடைவார்கள் என நம்புகிறோம்” என்றார். 
உதாரணமாக நீங்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு கிளம்புகிறீர்கள். மொபைலில் வீட்டிலுள்ள வைஃபை கனெக்‌ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை ‘search’ பாரில் தேடி ‘டவுன்லோட்’டை க்ளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம். மாற்றாக மேப்ஸ் மெனுவில்  ’Offline Areas’க்கு சென்று ’+’ பட்டனை க்ளிக் செய்தும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் சென்னையில் இணைய வசதி இல்லாமலே மேப்ஸ் உங்களுக்கு வழிகாட்டும்.
அதுமட்டுமல்லாது ஆன்லைனில் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் லைவ் ட்ராபிக் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மொபைல், வைஃபையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது தானாகவே மேப்ஸ் அப்டேட் செய்து கொள்ளும்.

Share this

Related Posts

Previous
Next Post »