பழனி தைப்பூசத் திருவிழா வரும் ஜன.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் ஜன. 24ஆம் தேதியும், தெப்பத் தேரோட்டம் ஜன. 27ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
பழனி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா வரும் ஜன.18ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா வருகிறார்.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜன. 23ஆம் தேதி இரவு 7 மணிக்கும், அதைத் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. தைப்பூசத் திருத்தேர் உலா ஜன. 24ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு நடைபெறுகிறது.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.