பெர்சனல் பிரேக்


K.D.D.

28DEC
2015 
08:10
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறினால், என்ன விளைவுகள் ஏற்படும்? மாறுவதற்குத் தேவையானவை நம்மிடம் உள்ளதா? என்பன போன்ற எங்கள் மனதில் இருந்த சந்தேகங்களுக்கு கேள்வி பதில் வகையில் தெளிவு படுத்தியதாக அமைந்த கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. நீங்களாகத் தொடர்ந்து அவற்றையும் தெளிவுபடுத்தவும். நன்றி.
ஆ. ஜெபசிங், காரைக்கால்.

டிஜிட்டல் 'எண்டைட்டில் மெண்ட்' என்பது என்ன உரிமை என்று குழம்பிப் போய் இருந்தேன். மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கியது சிறப்பு.
தெ. மறைமலை, சிவபுரம்.
ஸ்மார்ட் போனின் இன்றைய பயன்பாடு எப்படி முந்தைய சாதனங்களை இல்லாமல் செய்துவிட்டது என்று காட்டியது சரியான கணிப்பாகும். ஒரு நாள், இந்த ஸ்மார்ட் போனும், தேவையற்ற ஒரு பழைய சாதனமாக மாறும். செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சாதனங்கள் வந்தால், நிச்சயம் இவை தேவைப்படாது. அந்த நாள் வருகையில், உலக அளவில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
முனைவர் பேரா. எஸ். சிதம்பரம், மதுரை.

அமெரிக்காவை இணையப் பயனாளர்கள் என்ற முறையில் மிஞ்சினாலும், நம் மக்களில் அனைவருமா இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இல்லையே? படித்தவர்கள் இதனை உணர்ந்து எளிய மக்களுக்கு இணையத்தின் பயன்களையும், அதனை எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் கற்றுத் தர முன் வர வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியோடு, பொருளாதாரப் புரட்சியும் ஏற்படும்.
பேரா. கி. சந்திரா சேஷாத்ரி, கோவை.

ஒன் ட்ரைவ் குறித்த கேள்வி பதில் படித்தேன். மைக்ரோசாப்ட் தன் நிலையை மாற்றிக் கொண்டதாகப் பத்திரிக்கைகளில் படித்தேன். அந்நிலை குறித்து தெளிவான கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. சுப்ரமணிய செல்வன், தாம்பரம்.
பேஸ்புக் ஆர்க்கிவ் பைல்கள் எப்படி இருக்கும்? அவற்றை எப்படி மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பது குறித்த தெளிவான பதிலுக்கு நன்றி.
ஜே. ஆர். சுகுமாரன், திருப்பூர்.

விண்டோஸ் 10ல் கண்ட்ரோல் பேனல் மற்றும் செட்டிங்ஸ் ஆகிய இரண்டும் ஒரே வித பணியை மேற்கொள்ள நமக்குத் தரப்பட்ட வசதிகள் போலத்தான் தெரிகின்றன. இதற்கான காரணங்களை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
எஸ். பரந்தாமன், பொள்ளாச்சி.

டாகுமெண்ட்களில் தேதி அமைக்கும் வகை குறித்த பதில் அருமை. உடனே செயல்படுத்திப் பார்த்தேன். நீங்கள் தந்துள்ள படமும் உதவியது. முழுமையான பதில் தந்தமைக்கு நன்றி.
என். சுஜாதா, சேலம்.

தாங்கள் குறிப்பிட்டது போல, டேப்ளட் பி.சி.க்களை, சிறுவர்கள் முதல் தாத்தா பாட்டிகள் வரை, அனாயசமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள் தரும் செல்வம், மற்றும் டேப்ளட் பி.சி.க்களின் குறைவான விலை ஆகியன இவற்றை மக்களிடையே பிரபலமாக்கி வருகின்றன. பள்ளி படிப்பை இடையிலேயே தவறவிட்டவர்கள் கூட, இவற்றைக் கையாள்வது, மக்கள் இன்றைய தொழில் நுட்பத்தின் பயன்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதனையே காட்டுகிறது. கட்டுரைக்கு நன்றி.
பேரா. எஸ். சுந்தரராஜன், மதுரை
     
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »